Friday, 13 May 2016

#‎பஞ்சபூத ஸ்தல கீர்த்தனைகள்


                 



# தில்லை அம்பல வாணனே
சிவகாமி நாதனே சித்சபை வாசனே
எல்லை இல்லாப் பெரியோனே
நல்லோனே நான்மறை நாதனே..!

# வல்வினைகள் யாவுமே வல்லவா நின் நாமத்தைச்
சொல்லிய மறுகணம் நில்லாது மறையுமே
நல்லிசைப் பாக்களால் நாளும் நின்னைப் போற்றவே
நல்லருள் புரிந்திடும் நாட்டையும் காத்திடும்

# பதஞ்சலி வ்யாக்ரபாதர் இரு முனிகளும் காணவே
சதங்கை கட்டி ஆடியே பிரபஞ்சத்தை நடத்திடும்
அதிர முழங்கும் உடுக்கையிருந்து அனைத்துமே தோன்றிட
மதுரமான நகையுடன் தஹராகாசத்துள் உறையும் நாதனே...!